செயற்கைச் சூரியன் என அழைக்கப்படும் சீனவின் அணுக்கரு இணைவு உலை, முதல்முறையாக அணுக்கருக்கள் மற்றும் எலக்ட்ரான்கள் ஆகிய இரண்டுக்கும் 10 கோடி டிகிரி செல்சியல் வெப்பநிலையைக் கடந்து, புதிய மைல்கல் சாதனையைப் படைத்தது. கிட்டத்தட்ட எல்லையற்ற தூய்மையான ஆற்றலை நோக்கிய பாதையில் அடைந்த புதிய முன்னேற்றத்தை இது காட்டுகிறது.
அணுக்கரு இணைவைக் கட்டுப்படுத்தும் ஹுவாலியு-3 என்ற பெரிய அளவிலான அறிவியல் சாதனத்தைச் சீனா சுயமாகவே தயாரித்தது. அதனுடைய மின்சார உற்பத்தியானது, ஒளி மற்றும் வெப்பத்தை வெளியிடும் சூரியனைப் போன்றது. சமீபத்திய சோதனைத் தரவுகளின்படி, முதல்முறையாக, அணுக்கரு வெப்பநிலையானது 11.7 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும், எல்க்டரானின் வெப்பநிலை 16 கோடி டிகிரி செல்சியஸையும் எட்டியது என்று சீன தேசிய அணுஆற்றல் நிறுவனம் தெரிவித்துள்ளது.