அமெரிக்காவின் பொருளாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இராணுவம் அல்லது பொருளாதார முறையில் நிர்பந்தம் அளித்து பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து தீவின் கட்டுப்பாட்டு உரிமையைக் கைப்பற்றும் வாய்ப்பை நீக்கப்போவதில்லை என்று அமெரிக்காவின் புதிய அரசு தலைவராக பதவி ஏற்க உள்ள டொனல்ட் டிரம்ப் ஜனவரி 7ஆம் நாள் தெரிவித்தார்.
டிரம்பின் இந்தக் கூற்றுக்கு சில ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிரீன்லாந்து தீவு, அத்தீவின் மக்களுக்கு உரியது என்று டென்மார்க் தலைமையமைச்சர் பிரடெரிக்சன் 7ஆம் நாள் வலியுறுத்தினார். பிரான்சின் வெளியுறவு அமைச்சர் பாரோத், ஆதிக்க அரசியல் அச்சுறுத்தலை உலகம் எதிர்நோக்குவதை டிரம்பின் இக்கருத்துகள் வெளிகாட்டியுள்ளன எனக் குறிப்பிட்டார்.
மேலும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா மிரட்டி அடக்கப்படக் கூடாது என்றும் இராணுவ ஆற்றல் மற்றும் போட்டி ஆற்றலை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் 8ஆம் நாள் செய்திஊடங்களுக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.