தென் கொரியாவின் Jeju Air விமானத்தின் விபத்தில் கடும் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 29ஆம் நாள் அந்நாட்டின் தற்காலிக அரசுத் தலைவர் சோய் சங்க் மோக்கிற்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பில், இவ்விமான விபத்தில் உயிரிழந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த ஆறுதலையும் தெரிவிக்கிறேன். காயமுற்றோர் வெகுவிரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துக்கின்றேன் என்று தெரிவித்தார்.