தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று பின்வரும் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது.
அரியலூர்
பெரம்பலூர்
திருச்சி
கள்ளக்குறிச்சி
திருவண்ணாமலை
சேலம்
தர்மபுரி
கிருஷ்ணகிரி
திருப்பத்தூர் இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
