மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பாக, 8வது ஊதியக் குழுவை (8th Central Pay Commission) அமைத்து மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் மூன்று உறுப்பினர்கள் கொண்ட இந்த ஆணையம், ஊழியர்களின் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் மட்டுமின்றி, படிகள் (Allowances), போனஸ், பணிக்கொடை (Gratuity) உள்ளிட்ட அனைத்து நிதிப் பலன்களையும் மறுஆய்வு செய்யும்.
இந்தக் குழுவின் தலைவராக நீதிபதி ரஞ்சனா தேசாய், பகுதிநேர உறுப்பினராகப் பேராசிரியர் புலக் கோஷ் மற்றும் உறுப்பினர் செயலாளராகப் பங்கஜ் ஜெயின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் தலைமையகத்தைக் கொண்ட இந்த ஆணையம், தனது பரிந்துரைகளை 18 மாதங்களுக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்.
8வது ஊதியக் குழுவில் ஊதிய உயர்வு மட்டுமல்ல; இவையும் மறுபரிசீலனை செய்யப்படும்
