சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீயும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சியும் 5 ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினர்.
அப்போது வாங்யீ கூறுகையில்,
இவ்வாண்டின் செப்டம்பர் திங்களில், சீன மற்றும் ஈரானின் அரசுத் தலைவர்கள் வெற்றிகரமாகச் சந்திப்பு நடத்தி, இரு தரப்புறவுகளை ஆழமாக்குவது குறித்து ஒத்த கருத்துக்களை எட்டியதைக் குறிப்பிட்டார்.
மேலும், இரு தரப்பின் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 55ஆவது ஆண்டான அடுத்த ஆண்டில் ஈரானுடன் சேர்ந்து கையோடு கை கோர்த்து, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, சீன-ஈரானின் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை மேலும் உயர் நிலைக்கு தூண்ட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
அராக்சி கூறுகையில், சீனாவுடனான உறவின் வளர்ச்சியில் ஈரான் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. சர்வதேச விவகாரங்களில் சீனா நியாயத்தில் ஊன்றி நின்று வருவதை ஈரான் பாராட்டுகிறது என்றார்.
இரு தரப்புகள் நெருக்கமான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிரதேசத்தின் அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சியைக் கூட்டாக விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
