தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார் புகழைப் போற்றி வணங்குவோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இதழியல் துறையின் முன்னோடிகளில் ஒருவரான, அமரர் சி.பா.ஆதித்தனார் பிறந்த தினம் இன்று என்றும், தமிழக அமைச்சராகவும், சட்டப் பேரவைத் தலைவராகவும் மக்கள் பணிகளில் சிறந்து விளங்கியவர் என்றும் கூறியுள்ளார்.
அரசியல் மட்டுமல்லாது கல்வி மற்றும் சமூகப் பணிகளிலும் சிறந்து விளங்கியவர் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.