இலங்கையின் தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள சீனப் பண்பாட்டு மையத்தின் சார்பில் புதன்கிழமை நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய இலங்கை – சீனச் சமூக மற்றும் பண்பாட்டு ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் இந்திரானந்த அபயசேகர, இலங்கை அறிஞர்களும் சீனாவைப் பற்றி ஆர்வம் கொண்ட மக்களும் சீன நாகரிகத்தை முறைப்படி புரிந்து கொள்ள இந்த நூலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
சீன வரலாறு, கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து 4500க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டுள்ள இந்த நூலகமானது தடையற்ற வாசிப்பு அனுபவம் மற்றும் எளிதாக நூல்களைப் பெறுதல் ஆகியவற்றுக்காக மின்னணு மேலாண்மை அமைப்புமுறையையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
