அமெரிக்க வணிக அமைச்சர் ஜினா ரேமண்டோ அம்மையார் ஆகஸ்ட் 30ஆம் நாள், சீனாவில் மேற்கொண்டிருந்த 4 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டார். இவ்வாண்டின் ஜூன் திங்கள் முதல் இது வரை, சீனாவில் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் 4ஆவது அரசியல் தலைவர் அவர் ஆவார். அவர் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, புதிய தொடர்பு வழிமுறைகளை உருவாக்கவுள்ளதாகச் சீனாவும் அமெரிக்காவும் அறிவித்துள்ளதில் சர்வதேசச் சமூகம் கவனம் செலுத்தி வருகின்றது. இது, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் தப்பெண்ணங்களைக் குறைப்பதற்கு உதவி செய்யும் என பொதுவாகக் கருதப்படுகிறது. மேலும், சீனாவுடனான தொடர்பைத் துண்டிக்க அமெரிக்க முயலப் போவதில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்ட ஜினா ரேமண்டோ அம்மையார், அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்கா இம்மனப்பான்மையை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. சீன-அமெரிக்க வர்த்தக உறவுக்கான அடிப்படை, இரு நாட்டுத் தொழில் மற்றும் வணிக துறைகளின் நடைமுறைத் தேவைகள் ஆகிய காரணங்களால், இது முன்வைக்கப்பட்டது. சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இது நன்மை பயக்கும். இம்மனப்பான்மையை அமெரிக்கா எப்படி நடைமுறைப்படுத்தும் என்பதே கேள்வியாக உள்ளது.
முதலில், அமெரிக்கா சரியான கொள்கைகளைத் தீர்மானிக்க வேண்டும். பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவது என்பது சீன-அமெரிக்கப் பொருளாதார வர்த்தக உறவுக்கான சாராம்சமாகும் என்று தெளிந்து கொள்ள வேண்டும்.
மேலும், பொருளாதார வர்த்தகப் பிரச்சினையை அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளுடன் குழப்புவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்பது தற்போதைய உடனடி கடமையாகும்.தவிரவும், இரு நாடுகளுக்கிடையே அமைக்கப்படும் புதிய தொடர்பு வழிமுறைகள், அமெரிக்கா நடைமுறையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவற்றை சின்னமாக மட்டும் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும் என்பது திண்ணம்.