4வது சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருட்காட்சி அண்மையில் சீனாவின் ஜெ ஜியாங் மாநிலத்தின் நிங் போ நகரில் துவங்கியது. அது குறித்து ஸ்லோவேனிய தேசிய பேரவையின் துணை தலைவர் மெலா ஹொட் அம்மையார், சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிலையத்துக்குப் பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், நடப்பு பொருட்காட்சியின் தலைமை நாடுகளில் ஒன்றாக, ஸ்லோவேனியா, சொந்த சாதகமுள்ள தொழில்களைக் காண்பித்து, சீனாவுடனான ஒத்துழைப்பை விரிவாக்குவதில் முக்கியத்துவம் அளிக்கிறது. வாகனத் தொழில், புத்தாக்க அறிவியல் தொழில் நுட்பம் முதலிய துறைகளின் சாதனைகளைக் காட்டியதோடு, இப்பொருட்காட்சியின் மூலம், வர்த்தகம், பசுமை வளர்ச்சி, சுற்றுலா முதலிய துறைகளிலுள்ள ஒத்துழைப்பு வாய்ப்புகளை அதிகரிக்க விரும்புகிறோம். ஸ்லோவேனியாவுக்கும் சீனாவுக்குமிடையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும். சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு முறை, ஸ்லோவேனியாவுக்கு முக்கிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.