கேமரூனின் அரசுத் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பால் பியாவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 7ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, சீனாவும் கேமரூனும் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை ஆழமாக்கி, பல்வேறு துறைகளில் செழுமையான ஒத்துழைப்புச் சாதனைகளைப் பெற்று, தத்தமது மைய நலன் மற்றும் முக்கிய அக்கறை கொண்ட பிரச்சினைகளில் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருகின்றன என்றார். மேலும், சீன-கேமரூன் உறவின் வளர்ச்சிக்குத் தாம் முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிட்ட ஷிச்சின்பிங், அரசுத் தலைவர் பால் பியாவுடன் இணைந்து முயற்சியுடன், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டில் பெறப்பட்டுள்ள சாதனைகளைச் செயல்படுத்தி இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
