SIR விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (நவம்பர் 9) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக (வீடியோ கான்பரன்சிங்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் (MP), சட்டமன்ற உறுப்பினர்களும் (MLA) கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சியின் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, SIR நடவடிக்கைளுக்கு எதிராக தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் நவம்பர் 11-ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் போராட்டங்களை முன்னெடுப்பது மற்றும் கட்சிப் பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
