தண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம் 

டெல்லியைச் சேர்ந்த 25 வயதான நபர் நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள நீர் பூங்காவில் சறுக்கி விளையாடிய போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சய் மகேஸ்வரி என்பவர் தனது நான்கு நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் செக்டார் 39 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டார் 38A இல் உள்ள கிரேட் இந்தியா பிளேஸ்(ஜிஐபி) என்ற மாலில் உள்ள என்டர்டெயின்மென்ட் சிட்டி வாட்டர் பூங்காவிற்குச் சென்றிருந்தார்.
லாக்கர்களில் தங்கள் உடைமைகளை வைத்த பிறகு, நண்பர்கள் அனைவரும் நேராக தண்ணீர் ஸ்லைடுக்குச் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவராக சென்று சறுக்கத் தொடங்கினர், அப்போது மகேஸ்வரிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

You May Also Like

More From Author