பட்டம் முடித்தவர்களுக்கு SBI வங்கியில் வேலை.! ஆண்டுக்கு ரூ.18 லட்சம் சம்பளம்…

Estimated read time 1 min read

SBI ஆட்சேர்ப்பு 2024: இந்தியாவின் பன்னாட்டு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பாதுகாப்பு வங்கி ஆலோசகர் மற்றும் பொருளாதார நிபுணர் பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆரம்பத்தில் 2 ஆண்டுகள் பணியில் ஈடுபடுவார். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, விண்ணப்பதாரர் மும்பை மற்றும் புது டெல்லியில் பணியமர்த்தப்படுவார்.

இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா SBI-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bank.sbi/careers/current-openings மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி

17.07.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி
 06.08.2024

காலிப்பணியிடங்கள் பெயர் :

பதவியின் பெயர்
காலியிடங்கள்

பொருளாதார நிபுணர்
2

பாதுகாப்பு வங்கி ஆலோசகர்
1

மொத்த காலியிடங்கள்
3

வயது வரம்பு :

பொருளாதார நிபுணர் – குறைந்தபட்ச வயது 22 ஆகவும்
அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகவும் இருக்க வேண்டும்.
பாதுகாப்பு வங்கி ஆலோசகர் – அதிகபட்ச வயது வரம்பு 62 ஆக ருக்க வேண்டும்.

கல்வி தகுதி :

பாதுகாப்பு வங்கி ஆலோசகர் – விண்ணப்பதாரர்கள் இந்திய ராணுவத்தில் இருந்து லெப்டினன்ட் ஜெனரல் அல்லது அதற்கு மேல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் .
பொருளாதார நிபுணர் – விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன்master’s degree in Economics, Econometrics,Statistics, Applied Statistics, Mathematical Statistics ,Mathematical Economics, Financial Economics ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். PhD degrees in Economics, Banking, Finance, Statistics ஆகியவற்றில் PhD பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பளம் :

பொருளாதார நிபுணர் – தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 18 லட்சம் வழங்கப்படும்.
பாதுகாப்பு வங்கி ஆலோசகர்- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.34.50 லட்சம்கிடைக்கும்.

கட்டணம் :

ST/SC/PwBD பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது. ஆனால், பொது, EWS/OBC விண்ணப்பதாரர்கள் ரூ.750 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள்  SBI அதிகாரப்பூர்வ இணையதளமான https://bank.sbi/careers/current-openings என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
அதில், இணைய வங்கி/ டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு போன்றவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களது சமீபத்திய புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.
ஆன்லைன் பதிவுப் பக்கத்தில் (‘ஆவணத்தை எவ்வாறு பதிவேற்றுவது’ என்பதன் கீழ்) குறிப்பிடப்பட்டுள்ளபடி வேட்பாளர் தனது புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றும் வரை சமீபத்திய புகைப்படம் வரை ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்யப்படாது.
விண்ணப்பதாரர்கள் கவனமாக விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
விண்ணப்பம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டவுடன், விண்ணப்பதாரர் அதையே சமர்ப்பிக்க வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author