ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சமீபத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தாலிபான்கள் சனிக்கிழமை (நவம்பர் 9) உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், இரு நாடுகளுக்குமிடையே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபிபுல்லா முஜாஹித் கூறுகையில், பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஆப்கானிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியதாலேயே பேச்சுவார்த்தைகள் முறிந்தன என்றும், அது ஆப்கானிஸ்தானின் திறனுக்கு அப்பாற்பட்டது என்றும் விவரித்தார்.
“தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்தத்தை நாங்கள் மீறவில்லை, அது தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்” என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி
