நார்வே தலைமை அமைச்சர் ஜோனஸ் கால் ஸ்டோரே அண்மையில் உயர்வேக ரயில் பயணத்தின் போது சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.
இவ்வாண்டு அக்டோபர் 5ம் நாள் சீன-நார்வே தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவாகும். அவர் கூறுகையில், வரலாற்றை மீள்ளாய்வு செய்வதோடு, எதிர்காலத்தை முன்நோக்கிப் பார்க்க வேண்டும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடனான சந்திப்பில் சில துறைகளின் ஒத்துழைப்பை உறுதி செய்துள்ளோம்.
காலநிலை மாற்றச் சமாளிப்பு மற்றும் பசுமை மாற்றத்துக்கான தொழில் நுட்பம் குறித்து ஒத்த கருத்தை எட்டினோம். இரு தரப்பின் வர்த்தக உறவை மதிப்பிட்டு முன்னேற்றுவது குறித்து கலந்தாய்வு நடத்தினோம்.
செயற்கை நுண்ணறிவுக்கான கண்காணிப்பு விதிகள் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். சீனா, வலுவடைந்து வரும் நாடாகவும், ஆசியாவில் எங்களின் மிக பெரிய ஒத்துழைப்பு கூட்டாளியும் ஆகும்.
இரு நாடுகளுக்கிடையில் பாதுகாப்பன நம்பத்தக்க ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
பாலஸ்தீன நாட்டின் தகுநிலையை ஏற்றுக்கொண்ட அவர், பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதி போக்கைத் தொடர்ந்து முன்னேற்ற விருப்பம் தெரிவித்தார்.