4 கப்பல்கள் அடங்கிய சீனாவின் 16ஆவது ஆர்டிக் கடல் ஆய்வுக் குழு ஜூலை 3ஆம் நாள் லியாவ்நிங் மாநிலத்தின் டாலியன் நகரிலிருந்து புறப்பட்டது. இக்குழுவினர்கள் ஆர்டிக் கடலின் முக்கியக் கடற்பரப்பில், கடல் பனி, நீரியல், உயிரியல், உயிரின நிலைமை, காற்று சுற்றுச்சூழல் முதலியவை பற்றிய ஆய்வு மற்றும் கண்கானிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
தற்போது, உலகளாவிய காலநிலை வெப்பமாகி வருவதன் காரணமாக, வட துருவ மண்டலத்தின் சுற்றுச்சூழலில் பெரும் மாற்றங்கள் காணப்பட்டு வருகின்றன. கடல் பனி உருகுதல் உள்ளிட்ட நிலைமை மோசமாகியுள்ளது. இந்நிலையில், வட துருவ மண்டலத்தில் ஒட்டுமொத்த ஆய்வு மேற்கொள்வது என்பது, உலகக் காலநிலை மாற்றத்தைச் சமாளித்து, வட துருவ மண்டலத்தின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முக்கிய அடிப்படையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
