பொங்கல் பண்டிகைக்கான ரயில் பயண டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 10) தொடங்கியுள்ளது.
வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான நாட்களுக்கான முன்பதிவு ஆரம்பித்துள்ளதால், சொந்த ஊர் செல்ல காத்திருக்கும் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் டிக்கெட்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் கூட்டம் அலைமோதும் என்பதால், பயணிகளின் வசதிக்காக இந்த முன்பதிவு முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் காலை 8 மணிக்கு இந்த முன்பதிவு தொடங்குகிறது. அதன் அடிப்படையில், ஜனவரி 9ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதேபோல், ஜனவரி 10ஆம் தேதிக்கான பயண டிக்கெட்டுகளை நாளையும், ஜனவரி 11ஆம் தேதிக்கான டிக்கெட்டுகளை நாளை மறுநாளும் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் கவுன்ட்டர்கள் மூலம் பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம். பண்டிகைக் காலப் பயணத்தை திட்டமிடும் பயணிகள் தங்களுக்குத் தேவையான டிக்கெட்டுகளை விரைந்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
