சீனா மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து கட்டிடத் துறையின் தொழில்மயமாக்கம், எண்ணியல்மயமாக்கம், பசுமைமயமாக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ளவுள்ளது.
2025 சீன-மத்திய ஆசிய கட்டிடத் துறை அமைச்சர்கள் கூட்டம் அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் சீனா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் மற்றும் உஸ்பெக்ஸ்தானின் கட்டிடத் துறை அமைச்சர்களும் பிரதிநிதிகளும் உயர் தரமான உறைவிடம் மற்றும் நகர-கிராம வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றுவது குறித்து விவாதம் நடத்தினர்.
இதில் பாதுகாப்பு, வசதி, பசுமை, செயற்கை நுண்ணறிவுடன் கூடிய வீடுகளைக் கட்டியமைப்பது, கட்டிடத் துறையின் தொழில்மயமாக்கம், எண்ணியல்மயமாக்கம் மற்றும் பசுமைமயமாக்க மாற்றம் முதலிய துறைகளில் ஒத்துழைப்புகளை மேற்கொள்வது குறித்து முக்கிய ஒத்த கருத்துக்கள் எட்டப்பட்டன.
