சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

Estimated read time 0 min read

எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் முறையில் மே 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, நகரங்களில் குறைந்தபட்சம் 21 நாட்கள் இருந்த முன்பதிவு முறை தற்போது 25 நாள்கள் வரை உயர்த்தப்பட்டதாகவும், கிராமப் பகுதிகளில் 45 நாட்கள் வரை அதிகரிக்கப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஓடிபியை அடிப்படையாக வைத்து சிலிண்டர் விநியோகம், இனி நிரந்தரமாக மாற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உஜ்வாலா திட்டப் பயனாளர்கள் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் பயோமெட்ரிக் உறுதி செய்வது அவசியம் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

You May Also Like

More From Author