தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) இன்று (செவ்வாய்க்கிழமை) பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டமைப்பது உட்பட 31 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்தது.
இந்த போராட்டத்தில், தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதனால், பெரும்பாலான தொடக்க பள்ளிகள் இன்று இயங்கவில்லை. பல பள்ளிகளில் குறைந்த அளவிலான ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் போரட்டத்தில் குதித்த தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்
