ஏர் இந்தியா பயணிகள் கவனத்திற்கு! தினமும் 100 விமானச் சேவைகள், இலவச சாப்பாடு ரத்து?  

Estimated read time 1 min read

அமெரிக்கா-ஈரான் மோதல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள்(ATF) விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, இந்தியாவின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா, வரும் ஜூன் மாதம் முதல் தினமும் சுமார் 100 விமானச் சேவைகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
இது அந்நிறுவனத்தின் தினசரி 1,100 விமானச் சேவைகளில் கிட்டத்தட்ட 10% ஆகும்.
எரிபொருள் பயன்பாடு அதிகம் உள்ள ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய வழித்தடங்களில் விமானச் சேவைகள் பெருமளவு குறைக்கப்படவுள்ளன.
பாகிஸ்தான் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதால், ஏர் இந்தியா விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
இது கூடுதல் எரிபொருள் செலவை ஏற்படுத்தி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

You May Also Like

More From Author