RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் நியமிக்கப்பட்டதற்கு அவரது சகோதரி ரோகிணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
இதனால் அவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவிடம் கட்சி பொறுப்புகள் சென்றன. கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி முன்நிறுத்தப்பட்ட நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில், கட்சியின் தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.
இதற்கு அவரது சகோதரி ரோகிணி ஆச்சார்யா யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு மாபெரும் தலைவரின் பெருமைமிக்க இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், முகஸ்துதி செய்பவர்களுக்கும், ஊடுருவல் கும்பலின் கைகளில் பொம்மையாக இருக்கும் இளவரசரின் முடிசூட்டு விழாவிற்கும் தனது வாழ்த்துகள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
