கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றத் தாழ்வுடன் இருந்து வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 19) தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.10,230 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.81,840 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று (செப்டம்பர் 17) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்திருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.400 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலையில் இன்று ஏற்பட்ட இந்த உயரவு , நுகர்வோரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.