2025ஆம் ஆண்டில் சீனாவின் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்புடைய தரவுகளின்படி, 46 கோடியே 90 இலட்சத்துக்கும் மேலாகும். இதில் 4 சக்கர் வாகனங்களின் எண்ணிக்கை 36 கோடியே 60 இலட்சமாகும். மோட்டார் வாகனங்களின் ஓட்டுநர் எண்ணிக்கை 55 கோடியே 90 இலட்சமாகும்.
சீனத் தேசியளவில் 103க்கும் மேலான நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இதில், 7 நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
2025ஆம் ஆண்டின் இறுதிக்குள், சீனத் தேசியளவில் புதிய எரியாற்றல் சிற்றுந்துகளின் எண்ணிக்கை 4 கோடியே 39 இலட்சத்து 70 ஆயிரம் ஆகும். மொத்த சிற்றுந்துகளின் எண்ணிக்கையில் இது 12.01 விழுக்காட்டை எட்டியுள்ளது.
