கனேடிய பிரதமர் மார்க் கார்னி, தனது 28 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் நான்கு இந்திய வம்சாவளி எம்.பி.க்களை சேர்த்துள்ளார்.
இவர்களில் குறிப்பாக அனிதா ஆனந்துக்கு முக்கியமான வெளியுறவுத் துறை வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இருந்து அவர் பொறுப்பேற்ற பிறகு, அவரது முந்தைய 24 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில், இரண்டு இந்திய வம்சாவளி அமைச்சர்கள் இருந்தனர்.
அதன் பின்னர் நடைபெற்ற கூட்டாட்சித் தேர்தலில் கார்னி தலைமையிலான லிபரல்கள் வெற்றி பெற்றனர்.
தற்போது மாற்றப்பட்டுள்ள அமைச்சரவையில் நான்கு இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்- அனிதா ஆனந்த், மனிந்தர் சித்து, ரூபி சஹோட்டா மற்றும் ரன்தீப் சராய் ஆவர்.
கார்னியின் அமைச்சரவையில் உள்ள நான்கு இந்திய வம்சாவளி அமைச்சர்களைப் பற்றிய ஒரு பார்வை.
கனடாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி அமைச்சர்கள்!
