டிக்டாக் பிரச்சினையில் சீனா மற்றும் அமெரிக்காவின் பொது கருத்துக்கள் அதிக கவனத்தை ஈர்த்தது

Estimated read time 1 min read

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஸ்பெயினின் மாட்ரிடில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தரவு மற்றும் அல்காரிதம் முதலிய துறைகளில் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கள், இரு தரப்பும் உரிய முறையில் டிக்டாக் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அடிப்படையை அமைந்துள்ளதோடு, இரு நாடுகளுக்கிடையே தொழில் நுட்ப பரிமாற்றம் மற்றும் சந்தை திறப்புக்கு நிபந்தனையை உருவாக்கியுள்ளன.

கூர்மையான கருத்து வேற்றுமைகள் கொண்ட பிரச்சினைகள் குறித்து, சீனாவும் அமெரிக்காவும் ஒரே திசையை நோக்கி முன்னேறினால் தான், தீர்வு வழிமுறையைக் கண்டறிய முடியும் என்பதை இது வெளிகாட்டியுள்ளது.

இந்த பிரச்சினை குறித்து சீனாவும் அமெரிக்காவும் முக்கிய பொது கருத்துக்களை எட்டியுள்ளது, இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளின் சாரம்சம், பரஸ்பர நன்மை தரும் வெற்றி-வெற்றி ஆகும் என்பதை மீண்டும் குறிக்கிறது.

டிக்டாக் பிரச்சினையில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், சந்தை கோட்பாடுகளையும் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக விதிகளையும் கடுமையாக மீறியுள்ளதாகவும், சொந்த நாட்டின் நலன்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகளை சீனா உறுதியுடன் பேணிக்காப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சீனா நேர்மையாக மற்றும் கோட்பாட்டு ரீதியாக உள்ளது என்பதை இது முழுமையாக நிரூபிக்கின்றது. அதோடு, சிக்கலான பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கான பரஸ்பர ஏற்றுக்கொள்ள கூடிய வழிமுறைகளைக் கண்டறியும் திறனை சீனாவும் அமெரிக்காவும் கொண்டுள்ளன என்பதை இது வெளிக்காட்டியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author