ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதலுக்கு சீனாவின் கண்டனம்

 

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஈரானின் அணு சாதனங்களை அமெரிக்கா தாக்கியது பற்றி ஜுன் 22ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.

அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் கண்காணிப்பிலுள்ள அணு சாதனங்களைத் தாக்கியதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவின் இந்தச்செயல் ஐ.நா சாசனத்தின் கோட்பாட்டையும் சர்வதேச சட்டத்தையும் மீறி, மத்திய கிழக்கு பிரதேசத்தின் பதட்ட நிலைமையை தீவிரமாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இம்மோதலுடன் தொடர்பான தரப்புகள் குறிப்பாக இஸ்ரேல் வெகுவிரைவில் போர் நிறுத்தி, பொது மக்களின் பாதுகாப்பைப் பேணிக்காத்து பேச்சுவார்த்தையை துவக்குமாறு சீனா வேண்டுகோள்விடுத்தது. சர்வதேச சமூகத்துடன் பல தரப்பின் ஆற்றல் ஒன்றிணைந்து இப்பிரதேசத்தில் அமைதி மற்றும் நிதானத்தை மீட்பதற்கு முயற்சி செய்ய  சீனா விரும்புவதாக, அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author