பீகார் தேர்தலில் பெண்கள், இளைஞர்களின் வாக்குகளால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் (Bihar) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றதை போன்று, தமிழ்நாட்டிலும் NDA கூட்டணி மாபெரும் வெற்றிப்பெறும். பீகார் தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றி, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் எதிரொலிக்கும். இனிமேல் RJD அரசு திரும்ப வரப்போவதில்லை. எதிர்த்தரப்பினர் முஸ்லீம் – யாதவ் கூட்டணியால் வெல்ல முயன்றனர். ஆனால், மகளிர் – இளைஞர் வாக்குகளால் நாம் வென்றோம். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை வணங்குகிறேன். மக்கள் நலனுக்கு என்.டி.ஏ. கூட்டணி பாடுபடும்.
பீகார் தேர்தலில் பெண்கள், இளைஞர்களின் வாக்குகளால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தேர்தல் ஆணையத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் அவநம்பிக்கையை தமது வாக்குகள் மூலமாக மக்கள் புறக்கணித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் விரைவில் பெரிய பிளவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மக்கள் காங்கிரசை முழுமையாக நிராகரித்து விட்டனர். இனியும் அந்தக் கட்சியின் மீதான அதிருப்தி அதிகரிக்கும்” என்றார்.
