தோஹாவில் நடந்த ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக ஏ பிரிவு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 32 பந்துகளில் சதம் அடித்துச் சாதனை படைத்துள்ளார்.
இது டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இந்தியரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேகச் சதமாகப் பதிவாகியுள்ளது.
அதிவேகச் சதம் அடித்த இந்தியர்கள் பட்டியலில், ஊர்வில் படேல் மற்றும் அபிஷேக் ஷர்மா (இருவரும் 28 பந்துகள்) ஆகியோருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, ரிஷப் பண்ட்டுடன் (2018 இல் டெல்லி அணிக்காக 32 பந்துகளில் சதம்) சமன் செய்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் மின்னல் வேக சதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை
