இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் அன்னிய வெளிநாட்டு முதலீட்டின் பயன்பாடு குறித்த தரவுகளை சீன வணிக அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.
இதில் ஒட்டுமொத்தமாக, “ஒன்று உயர்வு மற்றும் ஒன்று வீழ்ச்சி” காணப்பட்டது. அதாவது, முதல் மூன்று மாதக்கட்டத்தில், நாடு முழுவதிலும் புதிதாக உருவாக்கப்பட்ட அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை, 12603 அதிகரித்து, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 4.3விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது. அன்னிய முதலீட்டின் பயன்பாட்டு தொகை, கடந்த ஆண்டை விட 10.8விழுக்காட்டுடன் 26923கோடி யுவான் குறைந்து காணப்பட்டது.
முதலில், இந்த தரவுகளின் காரணங்களை அறிந்துகொள்வோம்.
இந்த மாதங்களில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதித்தல் காரணத்தால், உலகளாவிய பொருளாதாரத்தில் கொந்தளிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, உறுதியற்ற தன்மை அதிகரித்துள்ளது. சில அன்னிய முதலீட்டாளர்கள் கவனமான மனப்பான்மையைக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், சீனா சீர்திருத்தம் மற்றும் திறப்பை தொடர்ந்து உறுதியுடன் முன்னெடுத்து, திறந்த அளவை மேலும் விரிவடைய செய்து, அன்னிய முதலீட்டைப் பயன்படுத்துதல் குறித்த கொள்கைகளை கைவிட மாட்டோம் என்று தெளிவாக தெரிவித்துள்ளது. இது, உலகிற்கு மதிப்பில்லாத உறுதி தன்மையை கொண்டு வந்துள்ளது.
அடுத்து, சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளைப் பார்த்தால், மூன்று முக்கிய சிறப்பு அம்சங்கள் கவனிக்கத்தக்கவை.
முதலாவதாக, இவ்வாண்டின் மார்ச் மாதத்தில், அன்னிய முதலீட்டின் பயன்பாட்டு தொகை வீழ்ச்சி அடைந்தாலும், அதன் சரிவு அளவு குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரு மாதங்களை விட, மார்ச் மாதத்தில் அன்னிய முதலீட்டின் பயன்பாட்டு தொகையின் குறைவு அளவு 9.6சதவீதப்புள்ளிகள் குறைந்ததோடு, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 13.2விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது. உறுதியற்ற தன்மை நிறைந்துள்ள சர்வதேச சூழ்நிலையில், இந்த குறைவு அளவு குறைதது எளிதல்ல.
இரண்டாவது, அன்னிய முதலீட்டின் கட்டமைப்பைப் பார்க்கும்போது, அறிவியல் தொழில் நுட்பத்துறை முக்கிய பங்காற்றியுள்ளது. மின்-வணிகம் சார் சேவைத் துறை, உயிரின மருந்துகள் தயாரிப்புத் தொழில், விண்வெளி கலன் மற்றும் சாதனத் தயாரிப்புத் தொழில் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீட்டின் பயன்பாட்டு தொகை முறையே 100.5, 63.8மற்றும் 42.5விழுக்காடு அதிகரித்து காணப்பட்டுள்ளன.
மூன்றாவது, முதலீடு செய்த பிரதேசங்கள் அதிகமாகி வருகின்றன. இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவில், செய்த முதலீட்டு தொகை, முறையே 56.2விழுக்காடு மற்றும் 11.7விழுக்காடு அதிகரித்துள்ளன. ஸ்வீடன், பிரிட்டன் முதலியவற்றின் முதலீட்டு அதிகரிப்பு அளவு 60விழுக்காட்டைத் தாண்டியுள்ளன.
தவிரவும், மேலும் அதிகமான அன்னிய முதலீட்டாளர்கள், தங்களது ஆய்வு மையங்களை சீனாவில் நிறுவி, முதல் அறிமுக நிகழ்வு, முதல் பரிசோதனை நிகழ்வு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில், சீனாவில் வெளிநாட்டு பங்கு மீதான கட்டுபாடுகள் தளர்ந்து வருவதோடு, அன்னிய முதலீட்டு வடிவங்களும் அதிகமாகி வருகின்றன.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவில் அன்னிய முதலீட்டின் பயன்பாடு குறித்த தரவுகள், ஒரு நல்ல தொடக்கத்தில் உள்ளது. சீனா மேலும் சிறந்த மனப்பான்மையுடன் உலக மூலதனத்தை வரவேற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.