ராஜமெளலியின் `வாரணாசி’- வெளியானது தலைப்புS.S.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய திரைப்படம் உருவாகி வருகிற நிலையில் இந்தத் திரைப்படத்தின் Title வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதன்போது இத்திரைப்படத்திற்கு ‘வாரணாசி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்தது.

பாகுபலி, ஆர் ஆர் ஆர் படத்தைத் தொடர்ந்து எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் மகேஷ்பாபு உடன் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பை பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்திற்கு வாரணாசி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு நடிக்க உள்ளதையும் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இதனை பட குழு அறிவித்துள்ளது.
