இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன், இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்த தகவலின்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் விண்கலங்களின் வருடாந்திர உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்க இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்தப் பேட்டியில், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் வர்த்தகத் தொடர்புச் செயற்கைக்கோள், பல பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி உட்பட ஏழுக்கும் மேற்பட்ட விண்வெளி ஏவுகணைகளுக்கு இஸ்ரோ தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.
இந்தியத் தொழில்துறை முற்றிலும் தயாரிக்கும் முதல் பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதலும் இதில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
அடுத்த 3 ஆண்டுகளில் விண்கல உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்க இஸ்ரோ திட்டம்
