சபரிமலை மண்டல கால பூஜைகள் கோலாகல துவக்கம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்  

Estimated read time 1 min read

கார்த்திகை மாதப் பிறப்பான இன்று முதல், ஐயப்ப பக்தர்களின் புனித யாத்திரைக்கான மண்டல கால பூஜைகள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சரண கோஷங்கள் முழங்க கோலாகலமாக துவங்கியது.

https://youtu.be/ybAMJpHHqFs?si=Wc6Km8lHEqfxhB4n

41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் மண்டல காலத்துக்காக, நேற்று (நவம்பர் 16) மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
தந்திரி மகேஷ் மோகனரரு முன்னிலையில் முக்கிய சடங்குகள் நடைபெற்றன.
கோயிலின் முக்கிய சடங்குகளுக்குப் பின், சபரிமலை மேல் சாந்தியாக பிரசாத் நம்பூதிரியும், மாளிகைப்புறம் மேல் சாந்தியாக மனு நம்பூதிரியும் பொறுப்பேற்றனர்.
இன்று அதிகாலை 3:00 மணிக்கு, புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையைத் திறந்து தீபம் ஏற்றியதும், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைகள் முறையாகத் துவங்கியது.

Please follow and like us:

You May Also Like

More From Author