அயோத்தியின் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை திங்களன்று (அக்டோபர் 27), பிரதான ராமர் கோயில் தொடர்பான அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதான கோயில் வளாகத்துடன், சிவபெருமான், விநாயகர், அனுமன், சூரியதேவன், பகவதி தேவி, அன்னபூரணி தேவி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆறு துணைச் சன்னதிகளின் பணிகளும் முடிவடைந்துள்ளதாக அறக்கட்டளை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
இந்தச் சன்னதிகளில் கொடிக் கம்பங்களும் கலசங்களும் நிறுவப்பட்டுள்ளதாக அறக்கட்டளைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் சம்பத் ராய், மகரிஷி வால்மீகி மற்றும் சபரி போன்றோருக்கு மரியாதை செலுத்தும் ஏழு மண்டபங்கள் மற்றும் சந்த் துளசிதாஸ் கோயில் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தினார்.
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் முழுவதும் நிறைவு; நவம்பர் 25 அன்று கொடியேற்றம்
