இந்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய இ-பாஸ்போர்ட் (e-Passport)-இன் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய இ-பாஸ்போர்ட், சர்வதேசப் பயண ஆவணங்களின் பாதுகாப்புத் தரத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இது, காகித அடிப்படையிலான பாஸ்போர்ட்டுகளில் உள்ள போலி கையொப்பம் மற்றும் ஆவண மோசடி போன்ற சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உள்ளது.
வரப்போகுது இந்தியர்களுக்கான புதிய இ-பாஸ்போர்ட்: அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் வெளியீடு
