சீனாவும் ஐப்பானும் கையொப்பமிட்டுள்ள 4 அரசியல் ஆவணங்களில் தைவான் பிரச்சினை பற்றி தெளிவான விளக்க விதிகள் உள்ளன, இது பற்றி ஜப்பானிய அரசு சீரிய முறையில் வாக்குறுதியளித்துள்ளது என்றும், இதற்குச் சர்வதேசச் சட்ட ரீதியில் ஆற்றல் உள்ளது, குழப்பம் மற்றும் தப்பு எண்ணம் ஏற்படும் இடமில்லை என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் தெரிவித்தார். 17ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் மேலும் கூறுகையில், ஜப்பான் தனது தவறான கூற்றையும் செயல்பாட்டையும் நிறுத்தி, சீனாவுக்கு அளித்த வாக்குறுதியை உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்.
1972ஆம் ஆண்டில் சீனாவும் ஜப்பானும் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட போது எட்டப்பட்ட சீன-ஜப்பானிய கூட்டறிக்கை, 1978ஆம் ஆண்டில் எட்டப்பட்ட சீன-ஜப்பானிய அமைதி நட்புறவு உடன்படிக்கை, 1998ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அமைதி மற்றும் வளர்ச்சிக்கான நட்பு ஒத்துழைப்பு கூட்டாளியுறவை நிறுவுவது தொடர்பான சீன-ஜப்பானிய கூட்டறிக்கை, 2008ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட நெடுநோக்கு பார்வையில் பரஸ்பர நலன் தரும் உறவைப் பன்முகங்களிலும் முன்னேற்றும் சீன-ஜப்பானிய கூட்டறிக்கை ஆகியவை மேற்கூறிய 4 அரசியல் ஆவணங்களாகும். இவற்றில், சீன மக்கள் குடியரசின் அரசாங்கம் சீனாவின் ஒரேயொரு சட்டப்பூர்வ அரசாங்கமாகும், தைவான் சீன மக்கள் குடியரசிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும் என்பதை ஜப்பானிய அரசு ஏற்றுக்கொள்வது தெளிவாக எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
