‘பேச்சுலர்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை திவ்யா பாரதி, தான் நடித்து வந்த தெலுங்குத் திரைப்படம் கோட்டின் இயக்குநர் நரேஷ் குப்பிலி மீது படப்பிடிப்பு தளத்தில் பெண்கள் வெறுப்புடன் அநாகரீகமாக பேசியதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நடிகை திவ்யபாரதி தற்போது தெலுங்கில் நரேஷ் குப்பிலி இயக்கி வந்த கோட் படத்தில் நடித்து வந்தார்.
படப்பிடிப்பின்போது இயக்குநருக்கும் திவ்யபாரதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், இயக்குநர் நரேஷ் குப்பிலி இந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரே இயக்கப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்திலிருந்து நீக்கப்பட்ட பின், நரேஷ் குப்பிலி சமூக வலைதளத்தில் திவ்யபாரதியை மறைமுகமாக விமர்சித்து ஒரு பதிவிட்டிருந்தார். இதற்கு திவ்யபாரதி நேரடியாக பதிலளித்தார்.
