இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 26ஆம் நாள் இந்திய அரசுத் தலைவர் திரௌபதி முர்மு அம்மையாருக்கு வாழ்த்து செய்தியை அனுப்பினார்.
அதில் ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், கடந்த ஆண்டில் சீன-இந்திய உறவு தொடர்ச்சியாக மேம்பட்டு வருகிறது. இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கு இது பொருந்தியதாக இருக்கும். உலகின் அமைதி மற்றும் செழுமையைப் பேணிகாத்து முன்னேற்றுவதிலும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. இரு நாடுகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்புக் கூட்டாளியாகவும் வளர்ச்சி வாய்ப்பாகவும் விளங்குவதென்ற முக்கிய பொது கருத்தில் இரு தரப்பும் ஊன்றி நின்று நெடுநோக்குத் தொடர்பை வலுப்படுத்தி பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை விரிவாக்க வேண்டும் என்றும், ஒன்றுக்கொன்று கவனங்களைக் கருத்தில் கொண்டு இரு நாட்டுறவு சுமுகமான நிலையான பாதையில் முன்னோக்கி செல்வதை முன்னேற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
அதே நாள், சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கும் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
