சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில், தற்போது மணிக்கு 2 கி.மீ வேகத்தில் மிகவும் மெதுவாக நகர தொடங்கியது இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புயல் உருவான பின், கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
இது குறித்த அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று(நவ.28) இரவு வரை மிதமான மழை பெய்யும், இந்த கணிப்பில் என்ற மாற்றமும் இல்லை. நவம்பர் 29, 30 தேதிகளில் சென்னை, கடலூர், விழுப்புரம், கடலோரப் பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
No change in the interpretations. Today right from Delta to Chennai will see moderate rains later in the day / night. Enjoy the cold winds in day !!!
Rains to pickup in intensity from 29 and leading into 30th there will be heavy rains in KTCC, Pondy, Cuddalore and Villupuram… pic.twitter.com/yJktDjpq4W
— Tamil Nadu Weatherman (@praddy06) November 28, 2024