சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகவிருந்த ‘தலைவர் 173’ திரைப்படத்திலிருந்து இயக்குநர் சுந்தர் சி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சலம் படத்திற்குப் பிறகு, சுமார் 28 ஆண்டுகள் கழித்து ரஜினி மற்றும் சுந்தர் சி மீண்டும் இணையவிருந்ததால், இப்படத்தின் அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
இப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டது.
ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ திரைப்படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்!
