டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது  

Estimated read time 1 min read

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்குத் தகுதி பெற்ற தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ மூலம் தங்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முன்னதாக, குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 15 அன்று நடைபெற்றது, அதன் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகின.
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு டிசம்பர் மாதத்தில் சென்னையில் மட்டும் நடைபெறவுள்ளது.
முதன்மைத் தேர்வுகள் டிசம்பர் 1 முதல் 4 வரையிலும், மீண்டும் டிசம்பர் 8 முதல் 10 வரையிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author