சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 3ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் தன்னார்வ மரம் நடும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதில் அவர் உரைநிகழ்த்தியபோது, மரம் நடுதல் மற்றும் காடு வளர்த்தலில் அனைவரும் முயற்சியுடன் பங்கெடுப்பதை ஊக்கப்படுத்தினார்.
இது குறித்து அவர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி குழுவில் வேலை தொடங்கிலிருந்து, அவர் தொடர் 17 ஆண்டுகளாக பெய்ஜிங் தன்னார்வ மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கெடுத்து வந்துள்ளார்.
இவ்வாண்டு, சீன மக்கள் குடியரசின் மரம் நடும் விழா கொண்டாடப்படும் 45ஆவது ஆண்டு நிறைவு. நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரின் முயற்சியுடன், மரம் நடுதல் மற்றும் காடு வளர்ப்புத் துறையில் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் சாதனைகள் படைக்கப்பட்டன என்று தெரிவித்தார்.
மேலும், மரம் நடுதல் என்பது, எதிர்காலத்தை உருவாக்குதல் தான். இதனை நாம் தலைமுறை தலைமுறையாக தொடர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
