10-வது முறையாக முதல்வரான நிதிஷ் குமார்!

Estimated read time 1 min read

பீகார் : முதலமைச்சராக 10-வது முறையாக நவம்பர் 20 அன்று பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவர் தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சேர்த்து வாங்கிய விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, மாதம் சுமார் ரூ.4.53 லட்சம் வரை பெறுகிறார். இதில் முதலமைச்சர் சம்பளமாக ரூ.2.5 லட்சம் அடிப்படைக்கு வெளியே வீடு, அலுவலகம், பாதுகாப்பு, பிற வசதிகள் உள்ளிட்டவை அடங்கும்.

ஓய்வூதியமாக எம்பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான தொகைகள் சேர்த்து ரூ.2.03 லட்சம் கிடைக்கிறது. இது அகவிலைப்படி (dearness allowance) சேர்க்கப்படாத அளவு; ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இது உயர்த்தப்படும்.நிதிஷ் குமார் 1989 முதல் 2004 வரை 15 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக (எம்பி) இருந்ததால், அவருக்கு எம்பி ஓய்வூதியம் கிடைக்கிறது. எம்பி திட்டப்படி, ஒரு நாள் பதவி இருந்தாலும் ரூ.31,000 அடிப்படை ஓய்வூதியம்.

மேலும், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.2,500 கூடுதல். 15 ஆண்டுகளுக்கான கூடுதல் ரூ.37,500. மொத்தம் ரூ.68,500 (அகவிலைப்படி சேர்க்கப்படாது). இது அவரது முந்தைய பதவிகளுக்கான நீண்ட சேவைக்கு அடிப்படையாக உள்ளது.சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ/எம்எல்சி) ஓய்வூதியமாக அடிப்படை ரூ.45,000. 1985-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பதவிக்கு இது. 2005 முதல் 2025 வரை 21 ஆண்டுகள் சட்டமேலவை உறுப்பினராக இருந்ததால், ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.4,000 கூடுதல் – மொத்த கூடுதல் ரூ.84,000. சேர்த்து சட்டமன்ற ஓய்வூதியம் ரூ.1.29 லட்சம். எம்எல்ஏ, எம்எல்சி விதிகள் எம்பி போன்றவை.

ஆனால் பீகார் விதிகளின்படி கூடுதல் வருடங்களுக்கு உயர்வு. இரண்டு ஓய்வூதியங்களும் சேர்த்து ரூ.2.03 லட்சம், சம்பளத்துடன் ரூ.4.53 லட்சம். இது அவரது 1985 முதல் தொடர்ச்சியான சேவைக்கானது. பீகார் எம்எல்ஏக்கள் மாதம் ரூ.1.4-1.5 லட்சம் சம்பளம் பெறுகிறார்கள் (ரூ.50,000 அடிப்படை, ரூ.55,000 தொகுதி அனுமதி, ரூ.40,000 தனிப்பட்ட உதவியாளர், ரூ.15,000 அலுவலகம்) அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author