24ஆவது சீனச் சர்வதேச முதலீட்டு மற்றும் வர்த்தகக் கண்காட்சி அண்மையில் சீனாவின் சியாமென் நகரில் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் கலந்து கொண்ட ஜெர்மனின் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கான மறைக்கப்பட்ட சாம்பியன் சங்கத் தலைவர் வால்டர் டோரிங், உலகின் மிகப் பெரிய சந்தைகளில் சீனாவும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டதோடு, சீனச் சந்தைக்குள் நுழையாவிட்டால், உலகச் சந்தையில் முன்னோடி நிறுவனமாக மாறுவது மிகக் கஷ்டம் என்று தெரிவித்தார்.
8 முதல் 11ஆம் நாள் வரை நடைபெற்ற இக்கண்காட்சியானது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வுக்குப் பின், முதலீடு என்னும் தலைப்பில் சீனா நடத்திய முதலாவது சர்வதேசக் கண்காட்சியாகும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சீனா பற்றி அறிந்து கொண்டு வளர்ச்சி வாய்ப்புகளைக் கண்டறியும் முக்கிய ஜன்னலும் இதுவாகும்.
சீனாவின் பெரிய சந்தை எப்போதும் உலகிற்குப் பெரிய வளர்ச்சி வாய்ப்பாகும். தற்போது புதிய உயர்தர உற்பத்தி திறனைச் சீனா பெரிதும் வளர்த்துள்ளதோடு, இந்தச் சந்தையில் புதிய சிறப்புகள் சிலவற்றையும் காட்சிப்படுத்தியது.
அதோடு, சீனாவின் வலுவான நெகிழ்ச்சியான உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி, சீனாவில் தொழில் புரியும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு வலுவான உத்தரவாதத்தை அளிக்கும். மேலும் புத்தாக்கம் சீனப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்து ஆற்றலாக மாறியுள்ளதுடன், மேலதிக வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனாவைப் புத்தாக்கத்தின் பிறப்பிடமாகக் கருதியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.