சீன இயற்கை வள அமைச்சகமும் சீன ஊடகக் குழுமமும் நெடுநோக்கு ஒத்துழைப்புக் கட்டுக்கோப்பு உடன்படிக்கையில் கையொப்பமிடும் விழா மற்றும் இயற்கை சீனா என்ற பெரிய நிகழ்ச்சித் தொடர்கள் ஒலிபரப்பும் சிறப்பு நிகழ்ச்சி ஜூன் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன இயற்கை வள அமைச்சர் குவேன் ட்சியௌ, சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷேன் ஹாய்சியொங் ஆகியோர் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
ஷேன் ஹாய்சியொங் கூறுகையில், இவ்வுடன்படிக்கை மூலம், இரு தரப்பும் நீண்டகாலப்போக்கில் நெருக்கமான நெடுநோக்கு ஒத்துழைப்பை உருவாக்கும். மேலும், இயற்கை சீனா என்ற நிகழ்ச்சித் தொடர்களின் ஒலிபரப்பைத் தொடக்கமாகக் கொண்டு உற்பத்தி வளர்ச்சி, வளமான வாழ்க்கை, சீரான உயிரியலுடன் கூடிய புதிய யுகத்தில் சீனாவின் நாகரிக வளர்ச்சிப் பாதையை வெளிக்காட்டுவோம். சீனப் பாணி நவீனமயமாக்கலின் மூலம் வல்லரசின் கட்டுமானம் மற்றும் தேசிய இனத்தின் மறுமலர்ச்சிக்குப் புதிய பங்காற்றுவோம் என்றார்.