ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் வியாழக்கிழமை கிரெம்ளினில் பேச்சுவார்த்தை நடத்தியதாக ரஷ்யாவின் அரசு நடத்தும் RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய இறக்குமதிகளுக்கு அதிக வரிகளை அறிவித்த ஒரு நாளுக்குப்பிறகு இந்த சந்திப்பு நடந்துள்ளது.
மாஸ்கோவில் நடைபெற்ற இந்த இருதரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளின் போது, இரு நாடுகளும் “மூலோபாய கூட்டாண்மை”க்கான தங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்தின.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக நடக்கும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர மாஸ்கோ ஒப்புக் கொள்ளாவிட்டால், வெள்ளிக்கிழமைக்குள் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது.
வரிகளை டிரம்ப் இரட்டிப்பாக்கிய மறுநாளே, ரஷ்யா அதிபர் புடினை சந்தித்தார் அஜித் தோவல்
