வசந்த கால விவசாய வேலை மீது கள ஆய்வு

Estimated read time 0 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செவ்வாய்கிழமை ஹுனான் மாநிலத்தின் சாங்தே நகரத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்ட போது, நெல் சாகுபடி வயலுக்கு நேரில் சென்று வசந்த கால விவசாய வேலைகள் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை கள ஆய்வு செய்தார்.


அதிக சாகுபடி பரப்பளவு கொண்ட விவசாயிகள், வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்கள், கிராம ஊழியர்கள் ஆகியோருடன் உரையாடுவகையில், தானியங்களின் அமோக அறுவடை மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு வசந்தகால விவசாய வேலைகள் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் மிகுந்த முக்கியமானது என்று வலியுறுத்தினார்.


மேலும், போதுமான விவசாய பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்யவும், தரமான விதைகள், தரமான பயிரிடும் வழிமுறை, தரமான விவசாய இயந்திரம், தரமான விளைநிலம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தவிரவும், தானிய பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை உறுதிப்படுத்தும் வகையில், வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கான ஆதரவு கொள்கைகள் பயனுள்ள முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author