சீனாவின் அன்ஹுய் மாநிலத்தின் ஹெஃபெ நகரில் 3ஆவது சர்வதேச ஆழமான விண்வெளி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
சிறிய கோளைத் தாக்க சீனா திட்டமிட்டுள்ளது. கூட்டு பறத்தல், தாக்கம், கூட்டு பறத்தல் என்ற வழிமுறையின் மூலம் இந்த கடமை நிறைவேற்றப்படும். விரிவாக சொன்னால், இந்த ஆய்வு, பூமியிலிருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில், எதிர் பக்கத்திலிருந்து வரும் கோள்களின் மீது தாக்க வசதியை செலுத்தி, இதன் மூலம் இந்த கோளின் அசைவு வழியை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று சீன சந்திரன் ஆய்வு திட்டப்பணியின் தலைமை வடிவமைப்பாளர் ஊ வெரென் அறிமுகம் செய்தார்.
பூமிக்கு அருகிலுள்ள கிரகங்களின் மீதான பாதுகாப்பு அமைப்பு முறையை உருவாக்க சீனா திட்டமிட்டு வருகின்றது. சிறிய கோள்களினால் ஏற்படும் தாக்கத்தை தடுப்பதற்கும், பூமியையும் மனிதர்களையும் பாதுகாப்பதற்கும் பங்காற்ற சீனா விரும்புகின்றது என்று சீன தேசிய விண்வெளி பணியகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.