பாரிஸ் காலநிலை உடன்படிக்கை, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவற்றிலிருந்து விலகுவதாக, அமெரிக்காவின் புதிய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இது குறித்து, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என். உலகளாவிய இணையப் பயனாளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பில், அமெரிக்கா முதன்மை என்ற கொள்கையானது, அமெரிக்காவை பொற்க்காலத்தில் நுழைய வழிநடத்த முடியாது என்றும், உலகளாவிய மேலாண்மையில் துறையின் குறைபாட்டை மேலும் அதிகரிக்க செய்யும் என்றும் வெளிக்காட்டப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான பாரிஸ் உடன்படிக்கை மற்றும் உலகச் சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகினால், முழு உலகின் சுகாதாரம் மற்றும் காலநிலை நிர்வாகத்துக்கு மாபெரும் பாதிப்பு ஏற்படும் என்று 68.5விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
சர்வதேச அமைப்புகள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளிலிருந்து மீண்டும் விலகுவதாக அமெரிக்காவின் புதிய அரசு அறிவித்தது என்பது, பெரிய நாட்டின் பொறுப்பு ஏற்க விரும்பாததன் அறிகுறியாகும். இதற்கு ஏமாற்றம் அடைந்த்தாக 81.4விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். இது அமெரிக்காவின் தேசிய செல்வாக்கு மற்றும் அதன் சர்வதேச செல்வாக்கை சேதப்படுத்தும் என்று 77.5விழுக்காட்டினர் நம்புகிறார்கள்.